நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ்!

  • August 24, 2020 / 10:38 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ், சினிமாவில் மட்டுமல்லாது மக்களுக்கு உதவுவதிலும் முன்னின்று அவர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், நடன இயக்குனர் என்று பல பரிமாணங்களை எடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பல ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.

தற்போது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தனது ரசிகர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தனது சினிமா பயணம் “மகாகணபதி” என்ற பாடலின் மூலம் தொடங்கியதாகவும், இந்த வாய்ப்பை தனக்கு அளித்த நடிகர் அஜித் சாருக்கும் சரண் சாருக்கும் தனது மிகப்பெரிய நன்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முனி மற்றும் காஞ்சனா பட வரிசையில் பிரபலமான ராகவா லாரன்ஸ் தற்போது, தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ரங்கஸ்தலம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

https://twitter.com/offl_Lawrence/status/1297030676647010304

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus