“45 ஆண்டுகால ரஜினியிஸம்!”- ராகவா லாரன்ஸ்!

  • August 12, 2020 / 11:05 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் காலடியெடுத்து வைத்து 45 வருடங்களை நிறைவு செய்ததை அவரது ரசிகர்களும் திரையுலகமும் மிக விமர்சையாக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரஜினிகாந்த் காமன் டிபி வெளியிட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் திரையுலகில் 45 வருடங்களை நிறைவு செய்ததை அடுத்து காமன் டிபி வெளியாகி அதை பிரபலங்களும் அவரது ரசிகர்களும் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வந்தனர்.

இதைத்தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகரும் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பல பரிமாணங்களையும் கொண்டவரான ராகவா லாரன்ஸ் தற்போது ரஜினியின் பாதம் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது “ரஜினிகாந்த் அவர்களின் 45 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையை திரையுலகமே கொண்டாடி வருகிறது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய கடின உழைப்பு மற்றும் எளிமையால் அனைவருக்கும் குருவாக திகழ்ந்து வருகிறார். அவருடைய உடல் நலம் மற்றும் செல்வம் நன்றாக இருக்க ராகவேந்திரா சுவாமியை பிரார்த்திக்கிறேன். குருவே சரணம்!” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து விரைவில் “சந்திரமுகி 2” படத்தில் நடிக்கவுள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு “அண்ணாத்த” படத்திற்கு பின் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus