திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகவா லாரன்ஸ் பலருக்கும் குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு சிறந்த முறையில் உதவி செய்து வருகின்றார். தனது படங்களில் அவர்களை மறக்காமல் பயன்படுத்தி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணர்வதில் அவர் சிறந்து விளங்குகிறார். இந்த கொரோனா சூழலில் தினமும் பல நூறு மக்களுக்கு அவர் வேண்டியனவற்றை செய்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதனை மேற்கோள்கட்டி பின்வருமாறு கூறியிருந்தார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஒரு சிறுவன் ராகவா லாரன்ஸ் போஸ்டருக்கு முத்தம் கொடுப்பதுபோல இருந்தது அதை கண்ட அவர் “இந்த படத்தை நான் சமூக ஊடகங்களில் கண்டேன். குழந்தைகளும் தெய்வமும் ஒன்று என்று நான் நம்புகிறேன். பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் நான் எப்போதும் மற்றவர்களுக்கு முழு மனதுடன் சேவை செய்கிறேன், இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கு ஒரு விருது கிடைத்ததைப் போல உணர்கிறேன்.
மேலும் அதிக அளவில் சேவையைச் செய்ய இது என்னைத் தூண்டுகிறது. தூய அன்புடன் என் மேல் அன்பை பொழிந்த அந்தக் குழந்தைக்கு நன்றி. இந்த குழந்தையை சந்திக்க நான் விரும்புகிறேன்”, என்று அவர் கூறியிருந்தார்.