ரகுமான் இசையில் சுஷாந்த்சிங் திரைப்பட பாடல் விரைவில்!

  • July 10, 2020 / 12:08 PM IST

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது, அவரது ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவர் கடைசியாக நடித்த “தில் பச்சாரா” எனும் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று செய்தி வந்தது.

இதைத்தொடர்ந்து இந்த படம் டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமான தகவல் வெளியானது.

பிறகு தில்பச்சாரா படத்தின் ட்ரெய்லர் யூடியுப் தளத்தில் வெளியிடப்பட்டு, அதிக லைக்ஸ்களையும் வியூஸ்களையும் பெற்று தற்போது உலக சாதனை படைத்துள்ளது.

இதை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் என்று செய்தியை ட்விட்டர் தளத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

முகேஷ் சப்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் சஞ்சனா சாங்கி மற்றும் சாயப் அலிகான் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் டைட்டில் ட்ராக் பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்தப் பாடலை ஏ.ஆர்.ரகுமான் தான் பாடி இசையமைத்துள்ளார் என்பது சிறப்பம்சம்.

இந்தத் திரைப்படம் பிரபல ஆங்கில நாவலான “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸை” தழுவி எடுக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 12 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus