லாக் டவுன்… 18 நாட்களில் சைலன்ட்டாக புதிய பட ஷூட்டிங்கை முடித்த ரைசா!
August 26, 2020 / 03:52 PM IST
|Follow Us
‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது. ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள்.
சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை ரைசா வில்சன். அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். இப்போது, ரைசா வில்சன் நடிப்பில் ‘#லவ், FIR, காதலிக்க யாருமில்லை, ஆலிஸ்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமிலும் ரைசா கேமரா முன் நடிப்பதை தான் செய்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.
ஆம்.. லாக் டவுனில் சைலன்ட்டாக இவரின் புதிய பட ஷூட்டிங் 18 நாட்களில் முடிந்து விட்டதாம். இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்குகிறார். முக்கிய ரோல்களில் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா ஆகியோர் நடித்துள்ளனர். எமோஷனல் த்ரில்லர் ஜானர் படமான இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியிடலாம் என ப்ளான் போட்டுள்ளனர்.