இது நம்ம ரைசாவா, இல்ல ‘பில்லா’ நயன்தாராவா?… கன்ஃப்யூஸ் ஆன ரசிகர்கள்!

‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை ரைசா வில்சன். அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல், வர்மா’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ரைசா வில்சன் நடிப்பில் ‘#லவ், FIR, காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், தி சேஸ்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் கார்த்திக் ராஜு இயக்கும் ‘தி சேஸ்’ (The Chase) படத்தின் ஷூட்டிங் ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா ஆகியோர் நடித்துள்ளனர். எமோஷனல் த்ரில்லர் ஜானர் படமான இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். ‘#லவ்’ படத்தை பாஸ்கோ இயக்க, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ மூலம் ஃபேமஸான வால்டர் பிலிப்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். ‘FIR’ படத்தை மனு ஆனந்த் இயக்க, ஹீரோவாக விஷ்ணு விஷாலும், முக்கிய ரோல்களில் கெளதம் மேனன், ரைசா, மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜானும் நடிக்கின்றனர்.

‘காதலிக்க யாருமில்லை’ படத்தை கமல் பிரகாஷ் இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கிறார். ‘ஆலிஸ்’ படத்தை மணி சந்துரு இயக்க, முக்கிய ரோலில் லைலா நடிக்கிறார். தற்போது, ரைசா வில்சன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது போட்டோஷூட் ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். ரைசா செம ஸ்டைலிஷ் லுக்கில் ‘பில்லா’ நயன்தாரா மாதிரி போஸ் கொடுத்திருக்கும் இந்த ஸ்டில் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

Share.