‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை ரைசா வில்சன். அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல், வர்மா’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ரைசா வில்சன் நடிப்பில் ‘#லவ், FIR, காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், தி சேஸ்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் கார்த்திக் ராஜு இயக்கும் ‘தி சேஸ்’ (The Chase) படத்தின் ஷூட்டிங் ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா ஆகியோர் நடித்துள்ளனர். எமோஷனல் த்ரில்லர் ஜானர் படமான இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம்.
சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். தற்போது, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதியும், நடிகை ரெஜினா கசாண்ட்ராவும் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.
#TheChase
Intriguing Trailer
Tamil https://t.co/4zmfFW5b0T
Telugu https://t.co/CvvSvqrR8j
Congrats team
@caarthickraju #RajShekarVarma @VelrajR @SamCSmusic @editorsabu @dhilipaction@raizawilson @anusuyakhasba @harishuthaman @Bala_actor @kaaliactor @sathishoffl pic.twitter.com/hxN10Et9OV
— VijaySethupathi (@VijaySethuOffl) January 28, 2021
#TheChase pah! What intensity
Tamil – https://t.co/tMvolD53TG
Telugu – https://t.co/eJWq0ckrP3 @caarthickraju #RajShekarVarma @VelrajR @SamCSmusic @editorsabu @dhilipaction@raizawilson @anusuyakhasba @harishuthaman @Satyamrajesh2 @adityamusic @sathishoffl @proyuvraaj
pic.twitter.com/iLf7iPyirV
— ReginaCassandra (@ReginaCassandra) January 28, 2021