நாளை ரிலீஸாகும் ராஜ் தருணின் ‘ஆஹா நா பெள்ளன்டா’ வெப் சீரிஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • November 16, 2022 / 06:40 PM IST

தெலுங்கு சினிமாவில் பிரபல ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜ் தருண். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் முதல் வெப் சீரிஸ் ‘ஆஹா நா பெள்ளன்டா’. இவ்வெப் சீரிஸை இயக்குநர் சஞ்சீவ் ரெட்டி இயக்கியுள்ளார்.

இதில் ராஜ் தருணுக்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஹர்ஷவர்தன், அமனி, போசணி முரளி கிருஷ்ணா, முஹமது அலி பைக், வத்லாமணி ஸ்ரீநிவாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘TAMADA மீடியா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சூர்யா ராகுல் டமடா தயாரித்துள்ளார். தற்போது, இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, இந்த சீரிஸின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. 8 எபிசோடுகள் கொண்ட இவ்வெப் சீரிஸை நாளை (நவம்பர் 17-ஆம் தேதி) தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரபல OTT தளமான ‘ஜீ5’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus