தெலுங்கு சினிமாவில் பிரபல ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜ் தருண். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் முதல் வெப் சீரிஸ் ‘ஆஹா நா பெள்ளன்டா’. இவ்வெப் சீரிஸை இயக்குநர் சஞ்சீவ் ரெட்டி இயக்கியுள்ளார்.
இதில் ராஜ் தருணுக்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஹர்ஷவர்தன், அமனி, போசணி முரளி கிருஷ்ணா, முஹமது அலி பைக், வத்லாமணி ஸ்ரீநிவாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதனை ‘TAMADA மீடியா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சூர்யா ராகுல் டமடா தயாரித்துள்ளார். ஷேய்க் தாவூத் கதை – திரைக்கதை எழுதியுள்ள இதற்கு கல்யாண் ராகவ் வசனம் எழுதியுள்ளார். 8 எபிசோடுகள் கொண்ட இவ்வெப் சீரிஸ் இன்று (நவம்பர் 17-ஆம் தேதி) தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரபல OTT தளமான ‘ஜீ5’யில் ரிலீஸாகியுள்ளது.