‘RRR’-ஐ தொடர்ந்து ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்போகிறாரா ராஜமௌலி?… அவரே சொன்ன மாஸ் பதில்!

  • December 11, 2021 / 01:37 PM IST

‘பாகுபலி’யை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ ஜெட் ஸ்பீடில் இயக்கி வருகிறார் டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்துள்ளார்கள். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட மாஸான ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

படத்தை வருகிற ஜனவரி மாதம் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் “தமிழில் முன்னணி ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை வைத்து எப்போது ஒரு படம் இயக்குவீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ராஜமௌலி “சரியான கதை அமைந்து, அந்த கதை ரஜினி சார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு தோன்றினால் கண்டிப்பாக நான் அவரை அணுகுவேன். அவரை வைத்து அந்த படத்தை இயக்குவேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus