வெளியான ராஜமௌலியின் RRR திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

  • October 22, 2020 / 07:27 PM IST

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எஸ் எஸ் ராஜமௌலி பிரம்மாண்ட காட்சிகளுடன் கூடிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு பெயர் போனவர்.

தொடர்ந்து பல வெற்றி தெலுங்கு திரைப்படங்களை எழுதி இயக்கி வந்த இவர் 2012ஆம் ஆண்டு நானி மற்றும் சமந்தா இணைந்து நடித்து வெளியான “நான் ஈ” திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் இரண்டு பாகங்களாக வெளி வந்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் ரசிக்கப்பட்ட திரைப்படம் “பாகுபலி”.

இந்த திரைப்படம் வெளியானதன் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை எடுத்தார். இதைத்தொடர்ந்து தற்போது ஐந்து மொழிகளில் வெளியாவதற்காக உருவாகி வரும் RRR என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் வரும் பீம்மின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் NTRஇன் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவும் வெளியிட்டுள்ளார்கள்.

DVV என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரிக்கிறார்கள். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். கே.கே.செந்தில்குமார் படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவு செய்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus