‘உலக நாயகன்’ தான் இயக்குநரின் முதல் சாய்ஸாம்… கமல் நடிக்கவிருந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்த ரஜினி!

  • October 22, 2022 / 12:37 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, செம்பன் வினோத் ஜோஸ் இருவரும் வில்லன் ரோல்களில் நடித்திருந்தார்கள்.

மேலும், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, ஜாஃபர் சாதிக், ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்திருந்தார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது. இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 3’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், கமல் ஹாசன் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 1980-யில் ரிலீஸான தமிழ் படம் ‘முரட்டுக்காளை’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார். ஆனால், எஸ்.பி.முத்துராமனின் முதல் சாய்ஸாக இருந்தது ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தானாம். பின், கால்ஷீட் பிரச்சனையால் கமலால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus