தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான்.
ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், ரஜினிகாந்த்தின் 170-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘ஜெய் பீம்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவிருக்கிறாராம். இதற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு (2024) ரிலீஸாகுமாம்.
We are feeling honoured to announce our next association with “Superstar” @rajinikanth for #Thalaivar170
Directed by critically acclaimed @tjgnan Music by the sensational “Rockstar” @anirudhofficial
@gkmtamilkumaran
@LycaProductions #Subaskaran#தலைவர்170 pic.twitter.com/DYg3aSeAi5— Lyca Productions (@LycaProductions) March 2, 2023