சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிப்பார்களா என்று இருவரது ரசிகர்களும் பலவருடங்களாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதாகவும், அந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாகவும், லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும் ஒரு செய்தி வெளியானது. ஆனால் கொரோனா லாக்டோன் காரணமாக இந்த படம் உருவாக்கப்பட வாய்ப்பில்லை என்று திரைப்பட வட்டாரம் தெரிவித்தது. ஆனால் தற்பொழுது மீண்டும் இந்த படம் கொரோனா முடிந்ததும் தொடங்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகிற நவம்பர் மாதம் தொடங்கலாம் என்றும், உலகநாயகன் தயாரிப்பில் இந்த படம் உருவாக இருப்பதால் இதில் அவர் நடிக்காமலும் போகலாம் என்ற செய்தியும் வந்துள்ளது.ரஜினியின் இந்த படத்திற்கு தற்போது “தலைவர்169” இன்று பெயரிட்டுள்ளார்கள்.
இந்த படத்தை பற்றி விபரங்கள் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படவிருந்த நிலையில் கொரோனா லாக்டோன் காரணமாக தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் “அண்ணாத்த” எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
உலகநாயகன் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” படத்தின் வேலைகளில் இறங்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கமலுடன் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இதைத் தொடர்ந்து கமல் “தலைவன் இருக்கின்றான்” என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார்.