தமிழ் சினிமாவில் இருதுருவங்களாக இருப்பவர்கள் ரஜினி-கமல் ஆவார். இணைந்து நடித்த 16 வயதினிலே படம் செம ஹிட்டானது. தற்போது கமல் நடிகர் ரஜினியை வைத்து படம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது அந்த படம் டிராப் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த திரைப்படமே கைவிடப்பட்டுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் கூறப்பட்டது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்த படத்தை கைவிட முடிவு செய்து இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்து விட்டு கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கினால் ‘அண்ணாத்த’ படம் பாதியில் நிற்கிறது.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தீவிர அரசியலில் ஈடுபடும் முடிவில் இருக்கிறார். எனவே கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் அவர் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இந்த தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.