“ஸ்ரீகாந்தின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது”… இரங்கல் தெரிவித்த ரஜினி – கமல்!
October 13, 2021 / 06:55 PM IST
|Follow Us
சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், பிரபல நடிகர் நெடுமுடி வேணு என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.
இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஸ்ரீகாந்த். இவர் தமிழில் ‘வெண்ணிற ஆடை, பாமா விஜயம், எதிர் நீச்சல், காசேதான் கடவுளடா, தங்கப்பதக்கம், சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது, நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று (அக்டோபர் 12-ஆம் தேதி) உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீகாந்தின் மறைவு குறித்து நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ட்விட்டரில் “என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என்று கூறியுள்ளார்.
ஸ்ரீகாந்தின் மறைவு குறித்து நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் ட்விட்டரில் “கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்கள் என ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்த ஸ்ரீகாந்த், தீவிரமான இலக்கிய வாசகராகவும் ஜெயகாந்தனின் ஆப்த சிநேகிதராகவும் இருந்தார். இன்று தன் இயக்கங்களை நிறுத்திக்கொண்டார். இதய கனத்தோடு வழியனுப்பிவைப்போம்” என்று கூறியுள்ளார்.
என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்கள் என ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்த ஸ்ரீகாந்த், தீவிரமான இலக்கிய வாசகராகவும் ஜெயகாந்தனின் ஆப்த சிநேகிதராகவும் இருந்தார். இன்று தன் இயக்கங்களை நிறுத்திக்கொண்டார். இதய கனத்தோடு வழியனுப்பிவைப்போம்.