ரஜினி, விஜய்யிடம் சம்பளத்தை குறைக்க பேச்சு வார்த்தை… இருவரின் முடிவு என்ன?
July 22, 2020 / 10:04 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மற்றும் ‘தளபதி’ விஜய். இவர்கள் இருவருக்குமே மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்போது ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் பாதியில் நிற்கிறது. விஜய் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
இவ்விரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்களுமே ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதாலும், திரையரங்குகள் மூடப்பட்டதாலும் தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் நிற்கிறது. ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை தயாரித்து வரும் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தான் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’-யையும் தயாரிக்கவிருக்கிறது.
இந்த லாக் டவுனுக்கு பிறகு ஏற்கனவே பேசப்பட்டிருக்கும் சம்பளத்தில் இருந்து குறைத்துக் கொள்ளச் சொல்லி, ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் நடிகர்கள் ரஜினி மற்றும் விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. தற்போது, இருவருமே தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை இயக்குநர் சிவாவும், விஜய்யின் 65-வது படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் இயக்குவது குறிப்பிடத்தக்கது.