ஓடி வந்த ஆறுதல் சொன்ன ரஜினிகாந்த் !

  • January 4, 2023 / 09:28 AM IST

தமிழ் சினிமாவில் நாற்பது வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை

தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் . படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது .

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை இன்று காலமானார் . ரங்கராஜ் பாண்டேவை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த் . ரங்கராஜ் பாண்டேவுக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் அரசியல் தொடர்பாக நல்ல நட்பு இருப்பது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus