ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி மறைவு !

  • January 6, 2023 / 03:50 PM IST

தமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் . சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்ளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் .

இந்நிலையில் ரஜினியின் ரசிகர் மன்ற அசோசியேஷன் தலைவராக பணியாற்றி வந்தவர் சுதாகர். 71 வயதாகும் இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை குறைபாட்டுடன் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இவரது மறைவு செய்தியை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஒரு ட்வீட் செய்துள்ளார் அதில் என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus