2012-ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற சின்ன பட்ஜெட் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் பா.இரஞ்சித். அந்த படத்தின் வெற்றியால் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘கபாலி, காலா’ என கூட்டணி அமைத்து சூப்பரான படங்களை கொடுத்தார்.
இப்போது பா.இரஞ்சித் இயக்கி கொண்டிருக்கும் புதிய படம் ‘சார்பட்டா பரம்பரை’. இதில் ஹீரோவாக ஆர்யாவும், ஹீரோயினாக துஷாராவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முன்னணி ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை வைத்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் பா.இரஞ்சித், இன்னொரு முன்னணி ஹீரோவான ‘தளபதி’ விஜய்யை வைத்து படம் இயக்குவது தொடர்பாக மீடியாவுக்கு கொடுத்த பேட்டியில் “ரஜினியின் ‘காலா’ படத்துக்கு பிறகே நடிகர் விஜய் சாரை மீட் பண்ணி ஒரு ‘சூப்பர் ஹீரோ’ கதையை சொல்லியிருந்தேன். சாரும் அக்கதை சூப்பராக இருக்கிறது என்று சொன்னார்” என்று கூறியுள்ளார்.