சூப்பர் ஹிட்டான ‘அண்ணாத்த’… டெக்னீஷியன்களுக்கு ரஜினி கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட் என்ன தெரியுமா?

  • December 23, 2021 / 08:08 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது. ரஜினிக்கு எதிராக மோதும் வில்லன் ரோல்களில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், அபிமன்யு சிங் நடித்திருந்தனர்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் பாலா, சதீஷ், சூரி, சத்யன், வேல ராமமூர்த்தி, அர்ஜை, ‘கபாலி’ விஸ்வநாத், லிவிங்க்ஸ்டன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். சமீபத்தில், இந்த படம் சூப்பர் ஹிட்டானதால், இயக்குநர் சிவாவின் வீட்டுக்கு சென்ற ரஜினி அவருக்கு தங்க செயினை கிஃப்ட்டாக கொடுத்தார். இந்நிலையில், இன்று படம் வெளியாகி 50-வது நாளை முன்னிட்டு படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களை ரஜினி நேரில் சந்தித்து அவர்களுக்கு தங்க செயினை கிஃப்ட்டாக கொடுத்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

1

2

3

4

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus