சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘இசைஞானி’ இளையராஜா. இவருக்கு அமைந்த முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். அது தான் ‘அன்னக்கிளி’. இந்த படத்தில் சிவக்குமார் ஹீரோவாக நடிக்க, இதனை இயக்குநர்கள் தேவராஜ் – மோகன் இணைந்து இயக்கியிருந்தனர்.
‘அன்னக்கிளி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைக்க இளையராஜா ஒப்பந்தமானார். தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் இசையமைத்த ‘இசைஞானி’யின் பல பாடல்கள் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது.
கடந்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி சென்னையில் இளையராஜா தனது புதிய ஸ்டுடியோவை துவங்கினார். ஸ்டுடியோ துவங்கிய முதல் நாளில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்துக்கான பாடல்கள் கம்போஸிங் பணியை தொடங்கினார் இளையராஜா. இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் @ilaiyaraaja
— Rajinikanth (@rajinikanth) July 6, 2022
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத @ilaiyaraaja அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 6, 2022