தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.
இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார்.
‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஜினியின் இரண்டு புதிய படங்களை தயாரிக்க ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் இன்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இவ்விரண்டு படங்களுக்கும் சேர்த்து ரஜினிக்கு ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதன் பூஜையை வருகிற நவம்பர் 5-ஆம் தேதி சென்னையில் நடத்த ப்ளான் போட்டுள்ளனராம். இதில் ரஜினியின் 170-வது படத்தை ‘டான்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். ரஜினியின் 171-வது படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
#Superstar #Rajnikanth with team #LycaProductions (Chairman Subaskaran, CEO Tamilkumaran and Deputy Chairman Prem Sivasamy).
Rajnikanth's next (first of the two film deal with Lyca) directed by #Don maker #CibiChakaravarthi is expected to have formal launch on November 5. pic.twitter.com/bXHL1eFFzM
— Balaji Duraisamy (@balajidtweets) October 28, 2022