ராமோஜி ராவ் பேத்தியின் திருமண நிகழ்ச்சியில் ரஜினி – சிரஞ்சீவி திடீர் சந்திப்பு… வைரலாகும் வீடியோ!

  • April 19, 2022 / 09:20 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளாராம்.

இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியின் உரிமையாளர் ராமோஜி ராவ் பேத்தியின் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்விழாவில் தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிரஞ்சீவியை ரஜினி நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus