சகோதரரின் 80-வது பிறந்த நாள் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற ரஜினி !

  • February 21, 2023 / 12:19 PM IST

இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் ஜெயிலர் . இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

மோகன் லால் , ஷிவ்ராஜ் குமார் , ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள் .

இந்நிலையில் பெங்களூரில் ரஜினிகாந்த் அவரது சகோதரர் சத்யநாராயணனின் 80வது பிறந்த நாளும் அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60 வது பிறந்த நாளும் ஒரே நாளில் கொண்டப்பட்டது . இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் ரஜினி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் . இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரஜினி , இந்த நாள் என்னை உருவாக்கிய இந்த தங்க இதயத்தில் தங்க மழை பொழிவதை பாக்கியமாக உணர்ந்தேன் . இறைவனுக்கு நன்றி என தெரிவித்தார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus