இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது .
இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து உள்ளார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .
இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படத்தின் டீசர் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகி இருந்தது . இதனை தொடர்ந்து சென்னையில் பெரிய அளவில் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது . இதில் ரஜினி மற்றும் கமல் சிறப்பு விருந்தினராக வந்து இருந்தனர் . விழாவில் பேசிய ரஜினிகாந்த் தான் இந்த புத்தகத்தை படித்தபோது நான் தான் வந்தியத்தேவன் கதாபாத்திரம் என்று நினைத்துக்கொண்டேன் . மேலும் பொன்னியின் செல்வனாக நடிகர் கமல் , ஆதித்த கரிகாலனாக விஜயகாந்த் , நந்தினியாக ஹிந்தி நடிகை ரேகா , குந்தவையாக ஸ்ரீ தேவி , பெரிய பழுவேட்டையராக சத்யராஜ் என நான் கதாபாத்திரங்களாக எண்ணிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார் .
நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் கதையில் இவர்கள் தான் முக்கியமான கதாபாத்திரங்கள் .