போதைப்பழக்கத்திற்கு எதிராக ரஜினி போட்ட கையெழுத்து !

  • February 27, 2023 / 09:24 AM IST

தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடையே போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கும் முக்கிய நபர்களைச் சந்தித்து கையெழுத்து பெற்று வருகிறார்கள். இன்று ரஜினிகாந்த் அந்த கையெழுத்து இயக்கத்தில் தன் கையெழுத்தைப் பதிவு செய்தார்.

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் . விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus