‘அண்ணாத்த’ கடைசி நாள் ஷூட்டிங்கில் படக்குழுவினரிடம் ரஜினி சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

  • May 25, 2021 / 02:06 PM IST

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது.

படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில், இப்படத்தை இந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த மே 12-ஆம் தேதி ஹைதராபாத் ஷெடியூலில் ரஜினி சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டதால், அவர் சென்னைக்கு திரும்பி விட்டார்.

தற்போது, கடைசி நாளன்று ரஜினி ‘அண்ணாத்த’ டீமிடம் “‘இந்த படம் நிச்சயம் என்னோட சினிமா கரியர்ல மிக முக்கியமான படமா அமையும். இப்படத்துக்கு பிறகு இன்னும் இரண்டு படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதற்கு எனது உடல் ஒத்துழைக்குமான்னு தெரியல. ‘கொரோனா’ லாக் டவுன் டைம்ல இந்த படத்தை சொன்னபடி முடித்துக் கொடுக்கவில்லையே என்ற கவலை மட்டுமே இருந்தது. ஆனால், இன்று படத்தில் சொன்னபடி நடித்து முடித்ததில் மகிழ்ச்சி” என்று கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus