இன்று (பிப்ரவரி 24-ஆம் தேதி) மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள். தற்போது, ஜெயலலிதா குறித்து டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் ரஜினி “அனைவருக்கும் வணக்கம். மதிப்பிற்குரிய ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளில், அவர் இப்போ நம்ம கூட இல்லையே என்கிற வருத்தத்துடன் அவரை நினைவுபடுத்திக் கொள்கிறேன். ஜெயலலிதா போல் இன்னொரு பெண்மணியை பார்க்கவே முடியாது.
அவருடைய அழகு, கம்பீரம், அறிவு, துணிச்சல், ஆளுமை. இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஜெயலலிதா அவர்களை அவ்ளோ மதித்தார்கள், அவருடைய திறமையை பார்த்து பிரம்மித்தார்கள். ஒரு காலகட்டத்தில் எனக்கும் அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.
அவருக்கு எதிராக நான் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுக்கு அப்புறம் என்னோட பொண்ணு கல்யாணத்துக்கு அவரை அழைக்கப் போகும்போது, அதை எல்லாத்தையும் மறந்து என் பொண்ணு கல்யாணத்துக்கு வந்து கல்யாணத்தை நடத்திக் கொடுத்தாங்க. அவங்க அந்த அளவுக்கு கருணை உள்ளம் கொண்டவங்க” என்று பேசியுள்ளார்.
அம்மா பிறந்தநாள் – ரஜினி வாழ்த்து#Amma #PuratchiThalaivi #Rajinikanth @rajinikanth pic.twitter.com/CMEflrIhAu
— Jaya Plus (@jayapluschannel) February 24, 2023