தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார்.
கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அனைவரும் அவரின் அரசியல் என்ட்ரி தொடர்பாக கேட்டனர். பின், மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றியும், தனது உடல்நிலை தொடர்பாகவும் ரஜினி பேசினார். இதனைத் தொடர்ந்து ரஜினி மீடியாவுக்கு கொடுத்த பேட்டியில் “மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு நடந்தது. அவங்களோட கருத்துக்களை என்னிடம் சொன்னார்கள். நானும் என்னோட பார்வையை அவர்களிடம் பகிர்ந்துக்கிட்டேன்.
நீங்க என்ன முடிவு எடுத்தாலும், நாங்க உங்க கூட இருக்கோம் அப்படின்னு சொல்லிட்டு அவங்க வந்து சொல்லியிருக்காங்க. நான் வந்து என்னோட முடிவை எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் தெரிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார். தற்போது, ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல. வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!” என்று கூறியுள்ளார்.
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல 🤘🏻 pic.twitter.com/9tqdnIJEml— Rajinikanth (@rajinikanth) December 3, 2020