‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் மோதப்போகும் சிலம்பரசன்!

  • September 11, 2021 / 02:38 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் ‘மெஹரஸைலா’ பாடல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.

இப்படத்தை தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்கிறார்கள். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதே நாளில், ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus