தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார்.
‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் ஷிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள்.
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் நடிக்க, இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.
இந்நிலையில், இன்று ரஜினிகாந்தும், ஐஸ்வர்யாவும் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.