ரஜினிகாந்த் மற்றும் விஜய்யின் வைரலாகும் த்ரோ பேக் புகைப்படம்!

  • September 23, 2020 / 09:00 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் வெளியீட்டுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் விஜய்யின் பழைய புகைப்படங்கள் வீடியோக்களை அவ்வப்போது விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து தங்கள் அன்பை பகிர்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி இதுவரை வெளிவராத விஜய்யின் பழைய புகைப்படங்கள் கூட இந்த லாக்டவுனில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் குறித்தும் மாஸ்டர் படம் குறித்தும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில், இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு விஜய் ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus