வெளியானது ‘அண்ணாத்த’ படத்தின் 2 குட் நியூஸ்… ஹேப்பி மோடில் ரஜினி ரசிகர்கள்!

  • August 28, 2020 / 07:44 PM IST

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது.

இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது. படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது.

பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. தற்போது, இந்த படத்துக்கான அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங்கை 2021 ஜனவரி மாதம் தொடங்கலாம் என படக்குழுவினர் ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், படம் 2021 ஏப்ரல் 14 அல்லது ஏப்ரல் 29-ஆம் தேதி ரிலீஸாகலாம் என்று சொல்லப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus