‘விடுதலை’ பார்ட் 1-ஐ பார்த்துட்டு படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்!

  • April 8, 2023 / 11:34 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘விடுதலை’. இப்படத்தின் பார்ட் 1 கடந்த மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, இயக்குநர் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த கோலிவுட்டின் முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus