தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘வேட்டையன், லால் சலாம்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என 3 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
‘வேட்டையன்’ படத்தை இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ரஜினி போலீஸ் ரோலில் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் 171-வது படத்தின் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளனர். இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட அவரின் ஸ்டில்ஸ் & வீடியோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.