சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. இதில் சித்தார்த், பாபி சிம்ஹா இணைந்து நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இதன் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள்X’ கடந்த நவம்பர் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது. இதில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதனை ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் – ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நேற்று இந்த படத்தை பார்த்து ரசித்த கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். தற்போது, நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்தியதாக தகவல் கிடைத்துள்ளது.
Thanks a lot Thalaivaa for showering your Love and Praises to #JigarthandaDoubleX
Your one hour long conversation with us gave me and the whole team such a Positive vibe n aura sir……