கொரோனா பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனரான தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.
இந்தப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான், ரக்சன், ரிது வர்மா ஆகியோர் நடித்திருந்தார்கள். கொரோனா லாக்டவுன் ஆரம்பித்த புதிதில் திரையரங்கில் வெளியான இந்தப் படம் ஓடிடியில் பின்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஹைடெக் திருடர்கள் பற்றிய இந்த கதைக்கரு மிகவும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தது.
தற்போது இந்த படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். காரணம் என்னவென்றால், இந்த படத்தை லாக்டவுன் சமயத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேசிங்கு பெரியசாமிக்கு போன் செய்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி தேசிங்கு பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “சூப்பர்..எக்ஸலண்ட்..ஹா..ஹ..ஹா.. வாழ்த்துக்கள் பெரிய பியூச்சர் இருக்கு உங்களுக்கு.. இந்த வார்த்தைகள் தான் காலையிலிருந்து என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.. கடவுளுக்கு நன்றி.. பறந்துட்டே இருக்கேன்” என்று உற்சாகமாக குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/desingh_dp/status/1288785861509750789?s=19
இதில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரை குறிப்பிடாவிட்டாலும் இவர் பாபா முத்திரை வெளியிட்டு, ரஜினிதான் இந்த கமெண்டை செய்தார் என்பதை உறுதி செய்துள்ளார்.