தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம்.சசிக்குமார். இவர் நடிப்பில் ‘அயோத்தி, நாநா, பரமகுரு, முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘அயோத்தி’ திரைப்படம் கடந்த மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் ஆர்.மந்திர மூர்த்தி இயக்கியிருந்தார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் யஷ்பால் ஷர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, ‘குக் வித் கோமாளி’ புகழ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதனை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்திருந்தார்.
இதற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருந்தார், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான இப்படம் கடந்த வாரம் OTT-யில் ரிலீஸானது.
இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த கோலிவுட்டின் முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ட்விட்டரில் “அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்” என்று ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.