Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயன்… வைரலாகும் செம மாஸான போஸ்டர்ஸ்!

  • November 28, 2023 / 03:05 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘லால் சலாம்’, இயக்குநர் த.செ.ஞானவேல் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் ரஜினியின் கேரியரில் 171-வது படமாம். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ளாராம்.

இதில் மிக முக்கிய ரோலில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கவுள்ளனர்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் ரஜினி – சிவகார்த்திகேயன் இருவரையும் வைத்து இப்படத்தின் போஸ்டர்ஸை டிசைன் செய்து வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus