தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், நேற்று விஜயவாடாவில் நடைபெற்ற பழம்பெரும் தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ்வின் நூற்றாண்டு விழாவில் ரஜினி கலந்து கொண்டார். விழா மேடையில் ரஜினி என்.டி.ஆரின் மகனும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான பாலகிருஷ்ணா குறித்து பேசுகையில் “பாலய்யா ஒரு தட்டு தட்டினாலே ஜீப் பறக்கும்.
இந்த மாதிரி சீன்ல நானோ, அமிதாப் பச்சனோ, ஷாருக்கானோ, சல்மான் கானோ நடிச்சா மக்கள் கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க. பாலய்யா நடிச்சா மட்டும் தான் அவங்க ஏத்துக்குவாங்க. ஏன்னா, மக்கள் அவரை பாலய்யாவா பார்க்கல, என்.டி.ராமாராவ்வாக பார்க்குறாங்க” என்று பேசினார். ரஜினி பேசிய இவ்வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.