தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘லால் சலாம்’, ‘வேட்டையன்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். கெஸ்ட் ரோலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் “‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவுல நான் சொன்ன காக்கா – கழுகு கதையை கேட்டுட்டு பலரும் விஜய்யை தான் தாக்கி பேசிட்டாருன்னு சொன்னாங்க. அதை கேட்கும் போது எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு. நான் எப்பவுமே விஜய்யின் நலம் விரும்பிதான்,
நான் எனக்கு போட்டி விஜய் தான் என்றோ, இல்லை விஜய் தனக்கு போட்டி ரஜினி தான் என்றோ சொன்னால் இருவருக்குமே மரியாதை இல்லாமல் போய்விடும். ரஜினிக்கு போட்டி ரஜினி தான், விஜய்-க்கு போட்டி விஜய் தான். இதனால் விஜய்யின் ரசிகர்களும், என்னுடைய ரசிகர்களும் இந்த காக்கா – கழுகு கதை பற்றி பேசி மோதிக் கொள்ள வேண்டாம். இது எனது அன்பான வேண்டுகோள்” என்று பேசியுள்ளார்.