தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘லால் சலாம்’, ‘வேட்டையன்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘லால் சலாம்’ படம் நேற்று (பிப்ரவரி 9-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ ரஜினியின் கேரியரில் 170-வது படமாம். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இதற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினி போலீஸ் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய ரோல்களில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. தற்போது, இப்படம் குறித்து ரஜினி மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “‘வேட்டையன்’ படத்தின் ஷூட்டிங் 80% முடிவடைந்திருக்கிறது. இன்னும் 20% மட்டுமே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
https://twitter.com/AVinthehousee/status/1756210474977484966?t=kIspgovwppfPPpjma_aeyQ&s=19