Rajinikanth : தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறி அறிக்கை வெளியிட்ட ரஜினி!

  • December 13, 2023 / 06:40 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘லால் சலாம்’, ‘வேட்டையன்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என 3 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

த.செ.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கவுள்ளனர்.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 12-ஆம் தேதி) ரஜினியின் பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus