Lal Salaam : தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி இன்று ரிலீஸாகியிருக்கும் ‘லால் சலாம்’ குறித்து ரஜினி ட்வீட்!

  • February 9, 2024 / 05:15 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘லால் சலாம்’, ‘வேட்டையன்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘லால் சலாம்’ படம் இன்று (பிப்ரவரி 9-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

கெஸ்ட் ரோலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். தற்போது, இந்த படம் குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய ‘லால் சலாம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus