தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘இசைஞானி’ இளையராஜா. கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி சென்னையில் இளையராஜா தனது புதிய ஸ்டுடியோவை துவங்கினார். ஸ்டுடியோ துவங்கிய முதல் நாளில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்துக்கான பாடல்கள் கம்போஸிங் பணியை தொடங்கினார் இளையராஜா.
இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கிறார். இதில் மிக முக்கிய ரோல்களில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், பவானிஸ்ரீயும் நடிக்கின்றனர். சமீபத்தில், ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.
தற்போது, இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவிற்கு டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நேரில் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. ரஜினி நடிக்கும் புதிய படமான ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் இம்மாத (பிப்ரவரி) இறுதியில் அல்லது அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#SuperstarRajinikanth paid surprise visit to Isaignani #Ilayaraaja‘s new studio. He spent quality time watching a live recording session. pic.twitter.com/TNhNnynC3I
— BARaju (@baraju_SuperHit) February 16, 2021
#Superstar #Rajinikanth ‘s Surprise visit to #ilayaraajastudio with #SocialDistance . #ilayaraja pic.twitter.com/cNZfWp3wxI
— Johnson PRO (@johnsoncinepro) February 16, 2021