இந்த ஹீரோக்கு தந்தையாக நடிக்கும் ரஜினிகாந்த் ! யார் அந்த ஹீரோ தெரியுமா ?

  • November 8, 2022 / 11:42 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது லைக்கா நிறுவனம் . லைக்கா நிறுவனம் சமீபத்தில் தயாரித்த டான் , பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளது. நடிகர் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் தற்போது லைக்கா நிறுவனம் தற்போது புதிய படம் ஒன்றின் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது . சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகனாக நடிக்க உள்ளனர் . இசைப்புயல் ஏ.ஆர் .ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் . மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்ற தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது .

மேலும் படத்திற்கு லால் சலாம் என்று தலைப்பு வைத்துள்ளனர் .கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் இந்த படம் உருவாக உள்ளது என்பதை படத்தின் போஸ்டர் நமக்கு உணர்த்துகிறது . கிரிக்கெட் விளையாட்டு மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றம் போன்ற காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு தற்போது எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது .

தற்போது இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது . நடிகர் விக்ராந்த் இந்த படத்தில் ரஜினியின் தந்தையாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . மேலும் இந்த கதாபாத்திரத்திற்கு அதிக வெயிட்டேஜ் இருப்பதாகவும் கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus