தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இவ்விரண்டு படங்களின் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஜினியின் மகளும், பிரபல இயக்குநருமான சௌந்தர்யா ட்விட்டர் பக்கத்தில் தனது அப்பாவுடன் மும்பையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Mumbai with appa dearest .. at aunty Nita Ambani s cultural center opening night !!! New look semma thalaiva #ThalaivarNewLook pic.twitter.com/DBzlug1FN6
— soundarya rajnikanth (@soundaryaarajni) March 31, 2023
#Thalaivar along with @soundaryaarajni at #Mumbai Nita Ambani Cultural centre Inauguration function
Super stylish super cool ❤️
Look at the love from press and media ❤️
Baasha bhai at Mumbai !!!#Rajinikanth | #Rajinikanth | #SuperstarRajinikanth | #MuthuvelPandian |… pic.twitter.com/20D1lv3ZFT
— Suresh Balaji (@surbalu) March 31, 2023