‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது.
படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது.
இந்த பிரச்சனை டோட்டலாக சரியானதும் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று ரஜினி உறுதியாக சொல்லி விட்டாராம். இதனால், இப்போது ‘சன் பிக்சர்ஸ்’ ஒரு முடிவு எடுத்திருக்கிறதாம். கூடிய விரைவில் அரசாங்கம் சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அனுமதி கொடுத்தவுடன், ரஜினி இடம்பெறாத காட்சிகளை படமாக்குங்கள், அதற்கான முன் ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று சிவாவிடம் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சொல்லியிருக்கிறது. இதனால் சிவாவும் ஒரு 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த ப்ளான் போட்டிருக்கிறாராம்.