தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார்.
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பாபா’.
ரஜினியே கதை-திரைக்கதை எழுதி தயாரித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸானபோது ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் ஃப்ளாப்பானது.
இப்படத்தை கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்தனர். இந்த வெர்ஷனில் படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, கடந்த 6 நாட்களில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.4.34 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.